ஒருநாள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு மனிதரிடம் வாழ்க்கை எவ்வாறு செல்கின்றது என்று கேட்டபோது அந்த மனிதர் அல்லாஹ் மறுமையில் ஹுர்லின்களை எனக்கு வைத்திருப்பான் என்று உள்ளத்தில் உள்ள கவலையை வெளிப்படுத்தினார். அவர்தான் ஜுலைபீப் (ரழி) இவரைப் பற்றி hadees இல் அசிங்கமான தோற்றத்தில் உள்ள மனிதர்... தாயோ தந்தையோ உறவினர்களோ யாரும் கிடையாதவர்... நபி (ஸல்) அவர்களுடன் ஜுலைபீப் (ரலி)கூறியதும் எம் தூதர் அழகிய முறையில் அவருடைய உள்ளத்தை குளிர்விக்கும் முகமாக..."இம்மையிலும் உங்களுக்கு மனைவி உண்டு மறுமையிலும் உங்களுக்கு மனைவி உண்டு" என்று கூறினார். இவருடைய வாழ்க்கை மெல்ல மெல்ல நகர்ந்தது. ஒரு நாள் இறைவனின் தூதர் ஒரு வீட்டை சுட்டிக்காட்டி அங்கு சென்று பெண் கேட்குமாறுகூறினார். ஆச்சரியப்பட்டார் ஜுலைபீப் எனக்கா?! திருமணம்...கனவிலும் அவர் நினைக்கவில்லை சந்தோஷத்துடன் சென்று பெண் கேட்டார்... அந்த வீட்டார் ஜுலைபிபே உங்களுக்கா பெண்! முடியாது என்று கூறி மறுத்துவிட்டார்.நபிகளாருடன் வந்து கவலையுடன் அவர் கூறுகிறார் நபிகளார் ஜுலைபிபிற்காக அந்த வீட்டிற்கு பெண் கேட்டு சென்றார். அந்த மனிதர்...அல்லாஹ்வுடைய தூதரே உங்களுக்கா பெண் கேட்டு வந்துள்ளீர் என்று சந்தோஷமாக கேட்டார்.  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்... இல்லை ஜூலைபிபிட் காக என்றார் வீட்டார் மறுத்துவிட்டார். இவற்றையெல்லாம் செவியுற்று இருந்த பெண் அல்லாஹ்வினுடைய தூதர் பெண் கேட்டு வந்த போது மறுக்க முடியுமா?நான் அவரையே திருமணம் முடிக்கிறேன் என்று கூறி அவரை மணந்தார்.  தாய் பாசம் இல்லாத தந்தை பாசம் கிடைக்காது உறவினர்கள் இல்லாத ஜுலைபிபிற்கு தாயாக... தந்தையாக...  உறவாக அந்தப் பெண் இருக்கின்றாள். அவர்களுடைய வாழ்க்கையில் சந்தோசமான காலம்  ஆரம்பித்த போது யுத்தமும் ஆரம்பமானது...பிறகு என்ன நடந்தது என்று அறிவதற்கு?