உலகம் தோன்றிய முதல் இந்த காலம் வரை வாழ்கின்ற அனைத்து மனிதர்களுக்கும் வழிகாட்டியாக இஸ்லாம் அமைந்துள்ளது.
உறவினர்களின் விடையத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறுகின்றது.
அல்லாஹ் அல்குர்ஆனில் பேசுகின்ற போது ..وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا ۖ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَبِذِي الْقُرْبَىٰ وَالْيَتَامَىٰ وَالْمَسَاكِينِ وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ وَالصَّاحِبِ بِالْجَنبِ وَابْنِ السَّبِيلِ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ۗ إِنَّ اللَّهَ لَا يُحِبُّ مَن كَانَ مُخْتَالًا فَخُورًا (36)
அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு இணை ஏதும் வைக்காதீர்கள் பெற்றோர்களுடனும் உறவினர்களுடனும் அயலவர்களுடனும் நண்பர்களுடனும் வழிப்போக்கர்களுடனும் தங்களுக்கு சொந்தமான அடிமைப் பெண்களுடனும் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் (an nisa::36) அல்லாஹ் அவனுடைய குர்வானிலே நம்முடன் இருக்கின்ற நெருக்கமான உறவினர்கள்.. சொந்தம் இல்லாத அயலவர்கள்... சொந்தமான அயலவர்கள்... நம்மோடு நெருக்கமாக பழகக்கூடிய நண்பர்கள்... தெரியந்தும் தெரியாமமும் இருக்கின்ற வழிப்போக்கர்கள்... உலகத்திலே யாருமே மதிக்காத... இந்த இஸ்லாமிய மார்க்கம் மட்டும் கூறக்கூடிய அடிமைப் பெண்கள் ஆகியோரின் நல்ல முறையில் நடந்து கொள்ளச் சொல்லி இந்த குர்ஆன் வசனம் கூறுகின்றது. இந்த உலகத்தில் யாரும் மீதியின்றி அனைவருடனும் சகோதரத்துவத்துடனும்... சமத்துவத்திடனும் பழக வேண்டும் என்பதை வசனம் உணர்த்துகிறது ஒவ்வொருவரும் அவரவருடைய சொந்தங்களுடன் நல்ல முறையில் பழகி உறவாடி அல்லாஹ்வினுடைய சாபத்திலிருந்து விலகி உறவுகளை சேர்த்து இறைவனுடைய அருளை பெற்றுக் கொள்வார்கள்.
0 Comments