அல்லாஹ்வினுடைய தூதர் ஸல் எதைக் கற்றுத் தந்தார்களோ அதுதான் மார்க்கம். குர்ஆனிலும் ஹதீஸிலும் இல்லாத ஒன்றை மார்க்கமாக்க முடியாது தொழுகை முடிந்தவுடன் நபி(ஸல்) தஸ்பி செய்வார்கள். கைகளை ஏந்தி பிரார்த்திக்கமாட்டாரகள்.  அப்பொழுது
(நபி ஸல்)  எந்த நேரத்தில் பிரார்த்தித்தார்?  அத்தஹியாத்திற்குப் பின் பிரார்த்திக்க கூடியவர்களாக இறைத்தூதர் இருந்தார். அதிலும் நான்கு விடயங்களை விட்டு பாதுகாப்புத் தேடுவதற்காக ஏவினார்கள். இமாம் அவசரமாக முடிக்கின்றார் என்றால் என்ன செய்வது? இமம் சற்று தாமதிக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். தொழுகைக்குப் பிறகு 15 நிமிடங்கள் திக்ருகள் செய்வதற்காக தாமதிப்பதை விடவும் தொழுகையில் பிறார்த்திப்பதற்காக தாமதிப்பது சிறந்தது. தொழுகையில் நபிகளார் காட்டிய  பாதையில் நடைபோடுவதன் மூலம் நபி ஸல் அவர்களின் வழிமுறையைப் பின்பற்றிய நன்மை எமக்கு கிடைக்கும். எனவே அத்தஹியாத்தில் தான் பிரார்த்திக்க வேண்டும்