இத்தனை வருடங்களாக நாம் ஒவ்வொரு ரமலானிலும் வழமையை விட அதிகமாக பள்ளிகளில் எமது காலத்தை கழித்தோம். ஆனால் வருகின்ற ரமலானில் அவ்வாறு பள்ளிக்கு செல்லமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இதுவரை காலம் நடந்த பயான் நிகழ்ச்சிகள், குர்ஆன் வகுப்புகள், தராவீஹ் தொழுகை,போன்ற எத்தனையோ நல்ல விடயங்கள் எம்மால் செய்ய முடியாது. ஆனால் கடந்த ரமலான்களை விட இந்த ரமலானில் அதிகமாக நன்மைகளை செய்வதற்கான வாய்ப்புகள் நமக்குண்டு. எத்தனையோ பயான்கள் கேட்டுள்ளோம்... وَمَا مِنْ دَآ بَّةٍ فِى الْاَرْضِ اِلَّا عَلَى اللّٰهِ رِزْقُهَا அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் இந்த பூமியிலேயே இல்லை அல்லாஹ்தான் ரிஸ்க்கழிக்கறவன்.நீங்கள் பள்ளிக்கு வாருங்கள் தராவிஹ் தொழுங்கள்.வியாபாரத்தை நிறுத்திக்கொள்ளுங்கள். என்று கூறிய போதெல்லாம் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள வேண்டும். இப்பொழுதுதான் சனங்கள் அதிகமாக வருகிறது என்று கூறி எத்தனையோ வியாபாரிகள் ரமலானை உயிர்ப்பிக்காமல் விட்டுவிட்டார்கள். ஐந்து நிமிடம் கடை மூட முடியாது என்று எண்ணிக் கொண்டிருந்தவர்களுக்கெல்லாம் வாரக் கணக்காக கடைகள் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் உணவு சமைக்க முடிகிறது. என்பதை அல்லாஹ் காட்டிவிட்டான். எனவே வருகின்ற ரமலானில் வியாபாரம் செய்ய முடியாதபோது அதிகமாக நன்மை செய்வதற்கான சந்தர்ப்பங்கள் உள்ளது. . அல்லாஹ் ரமலானுடைய மாதத்தில் அதிகமான நன்மைகளை எமக்கு அளிக்கின்றான். ஆயிரம் மாதங்களை விட சிறந்த இரவு லைலத்துல் கதர் அந்த மாதத்திலே அமைகின்றது. ليلة القدر خير من الف شهر நாம் ரமளான் மாதத்தை கண்ணியப்படுத்துவோம். இந்த வருடமாவது உயிர்ப்பிப்போம் முடிந்த அளவு தர்மங்களை செய்வோம். மரணித்து ஒரு மனிதன் இறுதியாக எனக்கு ஒரு சந்தர்ப்பம் தருவாயா? என்று அல்லாஹ்விடம் கேட்கும் போது அவன் தொழுகை நோன்பு ஹஜ் போன்ற நன்மைகளை செய்வேன் என்று கூற மாட்டான் அவன் அந்த நேரம் தர்மம் செய்வதற்காக சந்தர்ப்பம் ஒன்று கேட்டு மன்றாடுவான். குறுகிய நேரத்தில் செய்யக்கூடிய அதிக நன்மையைத் தரக்கூடிய ஒரு அமல்தான் தர்மம். வருகின்ற மாதத்தில் நிறைய அமல்களை செய்து நன்மைகளை பெற்று வருகின்றன ரமலானையாவது உயிர்ப்பிப்போம்.
0 Comments